தேனி மாவட்டத்தில் தொழில் பூங்கா, நவீன அரிசி ஆலை அமைக்க இடம் தேர்வு

தேனி மாவட்டத்தில் தொழில் பூங்கா, நவீன அரிசி ஆலை அமைக்க இடம் ேதர்வு நடைபெற்றது.

Update: 2021-09-29 16:44 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் புதிதாக தொழில் பூங்கா மற்றும் நவீன அரிசி ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில் புதிய தொழில் பூங்கா அமைக்க சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 
அதுபோல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நவீன அரிசி ஆலை அமைக்க உத்தமபாளையம் அருகே ஆணைமலையான்பட்டியில் 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காமாட்சிபுரம், ஆணைமலையான்பட்டி ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த இடங்களின் வரைபடங்களை பார்வையிட்டு வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் கூறுகையில், "இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, அரசின் உரிய அனுமதி கிடைத்தவுடன் தொழில் பூங்கா மற்றும் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும்" என்றார். 
இந்த ஆய்வின் போது கம்பம் எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிவேதா, ராயப்பன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி என்ற பால்ராஜ், ஆணைமலையன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீனா, உத்தமபாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்