ஒரு வாழைத்தாரில் 2 பூக்கள் பூத்த அதிசயம்

சிவகிரி அருகே ஒரு வாழைத்தாரில் 2 பூக்கள் அதிசயமாக பூத்தன.

Update: 2021-09-29 15:55 GMT
சிவகிரி அருகே உள்ள வேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் உமாமகேஸ்வரன். விவசாயி. இவரது தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இவர் தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இதில் ஒரு வாழையில் ஒரு தாரில் 2 வாழைப் பூக்கள் பூத்திருந்தது. இதில் சுமார் 40 வாழைக்காய்கள் இருந்தன.
வழக்கமாக வாழைத்தாரில் ஒரு  பூவுடன் வாழைக்காய்கள் காய்க்கும். ஆனால் அதிசயமாக ஒருதாரில் 2 பூக்கள் பூத்திருந்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்