தூத்துக்குடியில் பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

தூத்துக்குடியில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது

Update: 2021-09-29 12:31 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டர். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இது குறித்து சிறுமியின் தாய் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்