தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Update: 2021-09-29 11:36 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக முகாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 7-வது தளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கிறார்கள். முகாமில் வேலைதேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல்கள் படிவத்துடன் பயோடேட்டா கலந்து கொள்ளலாம். வேலையளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பும் தகவல் குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து கல்வித்தகுதியுள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமுக்கு வருபவர்கள் தங்கள் பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருந்தால் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். தனியார் துறையில் வேலைவாய்ப்பில் சேருவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. வெள்ளிக்கிழமைதோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கும். மேலும் விவரங்களுக்கு 0421 2999152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்