வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை
வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை
வெள்ளகோவில்
வெள்ளகோவில் அம்மன் கோவில் வீதியில் ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் வெள்ளகோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அதையொட்டி வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி உத்தரவின்பேரில் டாக்டர் கவுதம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன் கதிரவன் மற்றும் செவிலியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள வீட்டில் இருந்தவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அருகிலுள்ள வீட்டில் இருப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.