பூங்காக்கள் நாளை திறப்பு

திருப்பூரில் பூங்காக்கள் நாளை வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

Update: 2021-09-29 10:33 GMT
திருப்பூர்
திருப்பூரில் பூங்காக்கள் நாளை வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.  
 பூங்காக்கள் 
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். இதில் திருப்பூரின் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். 
தொலைதூர மாவட்டங்களை சேர்ந்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் தான் இருப்பார்கள். இந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பொழுதுபோக்குவதற்காக திருப்பூர் பகுதிகளில் பல இடங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுத்தம் செய்யும் பணி 
இந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக பல மாதங்களா பூங்காக்கள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் பொழுதுபோக்கு இல்லாமல் பலரும் அவதியடைந்தனர். இதற்கிடையே பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை சுகாதார பணியாளர்கள் பூங்காக்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. நாளை வெள்ளிக்கிழமை முதல் பூங்காக்கள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 
----
 

மேலும் செய்திகள்