மனைவியை எரித்து கொன்ற வாலிபர் நர்சிங் மாணவியுடன் தலைமறைவு போலீசார் தேடுதல் வேட்டை
திருப்பத்தூரில் மனைவியை எரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வாலிபர் நர்சிங் மாணவியுடன் தலைமறைவானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பூந்தமல்லி,
திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 30). இவர் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன ஓட்டுனர் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி திவ்யா (24), இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ (3) என்கிற மகள் உள்ளாள்.
இந்த நிலையில், கடந்த 25-ந்தேதி அதிகாலை கோவிலுக்கு செல்வதாக கூறி திவ்யா மற்றும் குழந்தையை சத்தியமூர்த்தி வெளியே அழைத்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்த திவ்யா மீது சத்தியமூர்த்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்
பின்னர், சத்தியமூர்த்தி அங்கிருந்து குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து அவர்கள் திவ்யாவை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசில் புகார்
சிகிச்சை பலனின்றி அவர் இறந்த நிலையில், இறப்பதற்கு முன்பு திவ்யா தெரிவித்த வாக்குமூலத்தில் தனது கணவர் குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறினார்.
இந்த நிலையில், குழந்தையுடன் மாயமான சத்தியமூர்த்தி செல்போனில் இருந்து வீடியோ ஒன்றை குடும்பத்தாருக்கு அனுப்பினார். அதில் தனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரம் அடைந்ததால் நீண்ட காலம் வாழ முடியாது. மனைவியை விட்டும் பிரிந்து வாழ முடியாத தீவிர காதலால் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை தேடி வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் போரூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது 20 வயது மகள் போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நர்சிங் படிப்பு பயின்று வந்ததாகவும், அவர் 2 தினங்களுக்கு முன்பு மாயமானதாகவும், அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவியுடன் மாயமா?
இந்த புகாரின் பேரில் போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தெரிவித்த தகவல் வருமாறு:-
திருப்பத்தூரில் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து தீவைத்து எரித்து கொலை செய்து தப்பி ஓடிய சத்தியமூர்த்தி சென்னை போரூரில் படிக்கும் நர்சிங் மாணவியுடன் மாயமான உள்ளார்.
இதையடுத்து மாணவி தங்கி இருந்த கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தியின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவியை சத்தியமூர்த்தி எங்கு அழைத்துச் சென்றுள்ளார்? என்பது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மாயமான மருத்துவ மாணவி, கொலை செய்யப்பட்ட திவ்யாவின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்துள்ளதாகவும், மருத்துவ மாணவியுடன் சேர்ந்து வாழ்வதற்காக சத்தியமூர்த்தி திட்டமிட்டு தனது மனைவியை தீ வைத்து கொழுத்தி கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.