சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து; கல்லூரி மாணவர் பலி

சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து; கல்லூரி மாணவர் பலி.;

Update: 2021-09-29 08:55 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 20). பி.சி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோவளம் சென்று விட்டு வீடு திரும்புவதற்காக பாலவாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் ஈஞ்சம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்ப முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரின் மீது மோதினார். இதில் ரஞ்சித் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்