ராணா கபூரின் மனைவி, மகள்களுக்கு ஜாமீன் மறுப்பு
யெஸ் வங்கி முறைகேட்டில் ராணா கபூரின் மனைவி, மகள்களுக்கு ஜாமீன் வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
மும்பை,
யெஸ் வங்கி முறைகேட்டில் ராணா கபூரின் மனைவி, மகள்களுக்கு ஜாமீன் வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
யெஸ் வங்கி முறைகேடு
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர். இவர் டி.எச்.எப்.எல். உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு லஞ்சம் வாங்கி கொண்டு கோடி கணக்கில் வங்கி கடன் வழங்கி உள்ளாா். இதன் மூலம் யெஸ் வங்கிக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் ராணா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பல நூறு கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்ததாக கூறப்படுகிறது. டி.எச்.எப்.எல். நிறுவனம் மட்டும் ராணா கபூருக்கு ரூ.900 கோடி லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. கூறியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. ராணா கபூரின் மனைவி பிந்து, அவரது மகள்கள் ரோஷினி, ராதா ஆகியோரையும் கைது செய்தனர். அவர்கள் தற்போது மும்பை பைகுல்லா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாமீன் மறுப்பு
சமீபத்தில் அவர்கள் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் கோர்ட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை.
இதையடுத்து அவர்கள் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணையின் போது 3 பேருக்கும் ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தநிலையில் மனுவை விசாரித்த நீதிபதி பாரதி தாங்ரே, ராணா கபூரின் மனைவி, மகள்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.
.......