நாமக்கல்லில் செல்ல பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்

நாமக்கல்லில் செல்ல பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-09-28 21:34 GMT
நாமக்கல்:
தடுப்பூசி முகாம்
உலக வெறிநோய் தினத்தையொட்டி செல்ல பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமினை நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் செல்வராஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
முகாமில் இந்திய கால்நடை மருத்துவ கல்லூரி கவுன்சில் உறுப்பினர்களான பீகார் கால்நடை மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சமந்த்ரே, ஐதராபாத் கால்நடை மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் சுசாந்த்குமார் தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு துறையின் பேராசிரியர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
122 செல்ல பிராணிகளுக்கு...
தொடர்ந்து கால்நடை சிகிச்சை செயல்பாடுகள் குறித்த கையேடும் வெளியிடப்பட்டது. கால்நடை நோய் தடுப்பு மருந்தியல் துறை தலைவர் பழனிவேல் தடுப்பூசி மருந்தினை வழங்கினார். முகாமில் நாய்கள், பூனைகள் உள்பட 122 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
முன்னதாக சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன் வரவேற்று பேசினார். முடிவில் கால்நடை பொது சுகாதாரத்துறை தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்