இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2021-09-28 20:14 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்(வயது 28). இவர் மோட்டார் சைக்கிளில் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு தடுப்பின் மீது மோதி, அந்த வழியாக சென்ற ஆட்டோ மீதும் மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்