4 பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் பறிப்பு

திருச்சி, செப்.29-
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது27️). இவருடைய மனைவி ஷோபனா தேவி. இவர்கள் சாஸ்திரி ரோட்டில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்கள். இங்கு நந்தினி, ரமணி, சுமதி ஆகிய 3 பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை ஷோபனா தேவியும், 3 பெண் பணியாளர்களும் அழகு நிலையத்தில் இருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அழகு நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். கத்தியை காட்டி மிரட்டி ஷோபனா தேவி மற்றும் 3 பெண் பணியாளர்களின் செல்போன்களை பறித்து சென்றனர். இதுகுறித்து தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் பூபதி கொடுத்த புகாரின் பேரில்தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன்களை பறித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.