வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2021-09-28 19:11 GMT
நெல்லை:
நெல்லை டவுன் வியாபாரிகள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் (பொறுப்பு) ஸ்டீபன் பிரேம் குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பெத்துக்கனி, துணைச்செயலாளர் முருகன், பொருளாளர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனே சரிசெய்ய வேண்டும். சரக்கு சேவை வரி எடுக்காத வணிகர்களும், வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாம், மூன்று மாதங்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் குணசேகரன், பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஆல்பர்ட் ஜெயராஜ், இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்