கறம்பக்குடி பகுதியில் ரூ.60 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் 2 பேர் கைது
ரூ.60 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன்பேரில் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சேவுகன்தெரு பகுதியில் லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்த செல்லத்துரை (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.6,525 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறவன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த திருப்பதி (39) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.