பிளஸ்-2 மாணவருக்கு கொரோனா

காரைக்குடியில் பிளஸ்-2 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-09-28 18:33 GMT
காரைக்குடி, 

காரைக்குடியில் பிளஸ்-2 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பிளஸ்-2 மாணவருக்கு கொரோனா
 கடந்த 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகளும் கொரோனா விதிமுறைப்படி முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து பாடம் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 1,330 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் ஒருவார காலமாக பள்ளிக்கு வரவில்லை. பின்னர் அந்த மாணவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 கிருமிநாசினி தெளிப்பு
இதனால் அவருடன் படித்த சக மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாணவர்கள், ஆசிரியர்கள் என 420 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுவதும் நேற்று துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  சுகாதாரத்துறை அலுவலர்கள் அந்த பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்