தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை

கமுதி அருகே தூக்குப்போட்டு சிறுமி தற்கொைல செய்து கொண்டார்.

Update: 2021-09-28 18:28 GMT
கமுதி,

கமுதி அருகே கோவிலாங்குளம் போலீஸ் சரகம் நெருஞ்சிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்களும், கலையரசி (வயது 15) என்ற மகளும் உள்ளனர். வீரப்பெருமாள் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கலையரசிக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்ததாக கூறப்படுகிறது கமுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி தீரவில்லை இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கலையரசி வீட்டில் யாரும் இல்லாத போது  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், தனிப்பிரிவு ஏட்டு அழகுராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்