காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெற்றோருடன் பட்டதாரி பெண் போராட்டம்

காட்டுமன்னார்கோவில் அருகே காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெற்றோருடன் பட்டதாரி பெண் போராட்டம் நடத்தினாா்.

Update: 2021-09-28 18:23 GMT
காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிவஞான மூர்த்தி. இவரது மகள் ராஜகுமாரி. இவர், தனது பெற்றோருடன் வீராணநல்லூர் கிராமத்தில் தனது காதல் கணவர் வீட்டின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டார். 
அப்போது ராஜகுமாரி கூறுகையில், நான் கடந்த 2014-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படித்தபோது, என்ஜினீயரிங் படித்த வீராணநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம். அதன்பிறகு கடந்த 2018-ம் ஆண்டு அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கார்த்திக் எனக்கு தாலி கட்டினார். பின்னர் இருவரும் சென்னைக்கு சென்று சில நாட்கள் அங்கேயே குடும்பம் நடத்தினோம். அப்போது அவர், பெற்றோர் சம்மதம் பெற்று உன்னை எனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றார். நானும் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். அவர் வரவில்லை. இது குறித்து சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் இருதரப்பையும் அழைத்து பேசினர். அப்போது விரைவில் வரவேற்பு நடத்தி என்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறினார்கள். ஆனால் இதுவரை வரவில்லை. எனவே எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்கும் வரை  இங்கேயே போராட்டம் நடத்துவேன் என்றார். 

மேலும் செய்திகள்