பஸ் மோதி கியாஸ் கம்பெனி ஊழியர் பலி

பஸ் மோதி கியாஸ் கம்பெனி ஊழியர் பலி

Update: 2021-09-28 18:20 GMT
வாணியம்பாடி
 
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 26). தனியார் கியாஸ்  ஏஜன்சி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். நேற்று காலை வெள்ளக்குட்டையில் இருந்து நிம்மியம்பட்டு நோக்கி  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது  அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் இந்த பகுதியில் பஸ்களை அதிவேகமாக இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்