டாஸ்மாக் கடை ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
முதுகுளத்தூர் அருகே கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் கடை ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் சோலைராஜ், உதவி விற்பனையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றதோடு, பில் வழங்காமல் வாடிக்கையாளரிடம் தவறாக பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலக அறிவுரைகளை பின்பற்றாமல் மேற்கண்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் சோலைராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர்கள் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அவர்கள் மீது துறை ரீதியாக விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.