வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்வு

பகுப்பாய்வுக்கு பிறகு, கூடுதலாக 6 மையங்கள் சேர்க்கப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 2301 ஆக உயர்ந்தது.

Update: 2021-09-28 17:59 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,295 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்து இறுதி பட்டியல் வெளியிடுவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அகர.நாராயணசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன், அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், சுந்தர்ராஜா, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் லெனின், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-

வாக்குச்சாவடிகள் பிரிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைபடி 1.1.2022-யை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 9.8.2021 முதல் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 25.8.2021 முதல் 24.9.2021 வரை யிலான காலங்களில் வாக்காளர் பதிவு அலுவலர், தங்களது அதிகார வரம்பிற்க்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து 2022-ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகளை முறைப்படுத்தும் பணி களை செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளில் 2,295 வாக்குச்சாவடி மையங் கள் இருந்தன. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைப்படி வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பகுப்பாய்வு

அதையடுத்து நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள பாகங்களை பிரித்தல், ஏற்கனவே அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை தேவை அடிப்படையில் இடமாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கம், பொது நல அமைப்புகள் ஆகியோரிடம் வாக்குச்சாவடி அமைவிடங்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
பகுப்பாய்வு செய்து 9சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குச்சாவடிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்