5 பவுன் நகை-1 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-09-28 17:43 GMT
கொள்ளிடம்:
 கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சி வடபாதி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை் சேர்ந்தவர் பிரியா (வயது65). இவர் அடிக்கடி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று சில நாட்கள் அங்கு தங்கி இருந்து விட்டு வருவது வழக்கம். இவர் ஊரில் இல்லாத போது இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் காவலாளியாக இருந்துள்ளார். பிரியா சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் அன்பழகன் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ேள புகுந்துள்ளனர். பின்னர் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த வளையல், சங்கிலி உள்ளிட்ட 5 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து பிரியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் வடபாதி கிராமத்தில் உள்ள தனது தம்பி மகன் தினேசுக்கு தெரிவித்துள்ளார்.இதையடுத்து. தினேஷ், புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

மேலும் செய்திகள்