7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

காங்கேயத்தில் அரிசி ஆலை அதிபரின் மகனை கடத்திய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-09-28 17:23 GMT
காங்கேயம்
 காங்கேயத்தில் அரிசி ஆலை அதிபரின் மகனை கடத்திய  7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல்
 காங்கேயத்தை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி. அரிசி ஆலை அதிபர். இவருடைய மகன் சிவபிரதீப் வயது 22. கடந்த மாதம்  22ந் தேதி காங்கேயம் பகுதியில் காரில் சிவபிரதீப் வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர்  சதாம் உசேன் ஓட்டினார். அப்போது மற்றொரு காரில் வந்த  7 பேர் கொண்ட கும்பல் சிவபிரதீப்பையும், அவருடைய கார் டிரைவர் சதாம் உசேனையும் காரில் திண்டுக்கல்லுக்கு கடத்தி சென்றனர். 
பின்னர் அந்த கும்பல் ஈஸ்வரமூர்த்தியை தொடர்பு கொண்டு ரூ.3 கோடி கேட்டது. இதையடுத்து ரூ.2 கோடி கொடுத்து, சிவபிரதீப்பையும் கார் டிரைவரையும் மீட்டு வந்தார். இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் 37 அகஸ்டின் பாலாஜி  பசீர்  சையது அகமதுல்லா  ஜாபர் சாதிக்  பாலன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதைடுத்து இவர்கள்   7 பேரையும்   குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கலெக்டர் வினீத்துக்கு  சிபாரிசு செய்தார். அதை பரிசீலித்த திருப்பூர்  கலெக்டர் இவர்கள்   7  பேரையும்  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பிறப்பித்தார். 
இதையடுத்து இவர்கள்  7 பேரும் குண்டர் சட்டத்தில் கைது  செய்யப்பட்டனர். இதற்கான ஆணை கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்