பாப்பாரப்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலை மேற்பார்வையாளர் தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலை மேற்பார்வையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-28 17:05 GMT
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி அப்பாவு நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது43). இவர் தர்மபுரியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், பாப்பாரப்பட்டியை சேர்ந்த பூர்ணிமா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பூர்ணிமா 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனால் கார்த்திக் மனைவி பூர்ணிமாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற கார்த்தி இரவு தனது மனைவி பூர்ணிமாவை செல்போனில் தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்து விட்டதாகவும், தான் இறந்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர் வீட்டுக்கு சென்று நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்குமாறு கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். 

இந்த நிலையில் நேற்று காலை பாப்பாரப்பட்டி தர்மபுரி ரோட்டில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் உள்ள வயல் பகுதியில் கார்த்தி விஷம் குடித்து விட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார்த்தி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்