மொடக்குறிச்சியில் 72 நாய்- பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

மொடக்குறிச்சியில் 72 நாய்- பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.;

Update: 2021-09-28 15:51 GMT
ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் இலவச தடுப்பூசி முகாம் மொடக்குறிச்சி வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. மொடக்குறிச்சி கால்நடை மருத்துவமனையில் நடந்த இந்த முகாமை வட்டார கால்நடை உதவி இயக்குனர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இதில் 72 நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. 
இதேபோல் மொடக்குறிச்சி வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் இந்த தடுப்பூசி முகாம் நடந்தது. 

மேலும் செய்திகள்