திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், நிறுவன தலைவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், நிறுவன தலைவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

Update: 2021-09-28 14:00 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பயின்றோர் கழகமும், தமிழ்த்்துறையும் இணைந்து ஆண்டுதோறும் கல்லூரி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மற்றும் நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு கொரோனா தொற்று தடைக்காலம் என்பதால் இவ்விழா இணைய வழி வாயிலாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், சித்திரைராஜா, ஜெயசிங் சாம்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தட்சணமாற நாடார் சங்க கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார், பயின்றோர் கழகத் துணைத்தலைவர் ஜெயபோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பயின்றோர் கழக செயலர் பிரபாகரன் வரவேற்று பேசினார். 
இவ்விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட்ராமராஜ், செயலர் நாராயணராஜன் ஆகியோர் இணையவழியாக இணைந்து வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியினை மாணவர்கள் காணொலி காட்சி மூலம் பார்ப்பதற்கு கணினி அறிவியல் துறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கணினி அறிவியல் துறை தலைவர் வேலாயுதம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கல்லூரி பேராசிரியர்கள் பாலு, பாலகிருஷ்ணன், சேகர், ஹெட்கேவார் ஆதித்தன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பயின்றோர் கழக உறுப்பினர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். பயின்றோர் கழக இணைச் செயலர் கு.கதிரேசன் நன்றி கூறினார்.
------

மேலும் செய்திகள்