சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள் பாலிப்பவர் சொர்ண ஆகர்ஷன பைரவர்.
இவருக்கு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி 5 கால சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளினார். இதனையடுத்து தனிமனித இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.