தூத்துக்குடியில் லாரி மோதி விவசாயி பலி

தூத்துக்குடியில் லாரி மோதி விவசாயி பலியானார்

Update: 2021-09-28 13:15 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் கோயில்பிச்சை (வயது 53). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரவுண்டானாவை கடக்க முயன்ற போது, தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கோயில்பிச்சை மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்