2 கடைகளின் மேற்கூரையை பிரித்து பணம் திருட்டு
2 கடைகளின் மேற்கூரையை பிரித்து பணம் திருட்டு;
பொங்கலூர்
பொங்கலூர் அருகே உள்ள கொடுவாய் நிழலியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் கொடுவாய் கடைவீதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதுபோல் கொடுவாய் அடுத்த காடையூரை சேர்ந்த சிவா என்பவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். பின்னர் நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பணம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் சென்று பார்த்தபோது மருந்துக்கடையில் இருந்த ரூ.20 ஆயிரமும், மளிகை கடையில் இருந்த ரூ.1500-மும் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து இருவரும் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். கொடுவாய் பகுதியில் அடிக்கடி கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடுவது அதிகரித்துவருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
----