கயத்தாறு காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

கயத்தாறு காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது

Update: 2021-09-28 12:07 GMT
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5 ஆட்டோ ஸ்டாண்டுகளில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கும், கயத்தாறு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கிராமப்புற ஆட்டோ டிரைவர்களுக்குமான விழிப்புணர்வு கூட்டம் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெருக்கள், சாலைகளில் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் நபர்களை வாகனத்தில் ஏற்றாமல் இருக்க வேண்டும். அவர்கள் குறித்து போலீஸ் நிலையத்திற்கு ரகசியமாக தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஆட்டோ சங்க நிர்வாகிகளும், பிற சங்க நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனி தீலிப், பால் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்