தென்மண்டல கராத்தே போட்டி தூத்துக்குடி மாணவர்கள் சாதனை
தென்மண்டல கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி:
தென் மண்டல அளவிலான கராத்தே போட்டி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் 15 தங்கப் பதக்கங்களையும், 9 வெள்ளிப் பதக்கங்களையும், 9 வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், கராத்தே பள்ளி மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட துணை தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.
---------------