குன்றத்தூர் ஒன்றியத்தில் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்

குன்றத்தூர் ஒன்றியத்தில் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்.

Update: 2021-09-28 08:44 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மவுலிவாக்கம், பாய்கடை சந்திப்பு பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திறந்தவெளி வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து பரணிபுத்தூர் சென்ற அவர், பராமரிப்பு இல்லாமல் இருக்கும் சுடுகாடு மற்றும் மலைபோல் குவிந்து இருக்கும் குப்பைமேடு பகுதியை வேனில் இருந்தபடியே ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு படப்பை பஸ் நிறுத்தம் அருகே திறந்த வேனில் நேற்று இரவு கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

மேலும் செய்திகள்