இரும்பு பட்டறைகளில் போலீசார் சோதனை
இரும்பு பட்டறைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
மங்களமேடு:
மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள இரும்பு பட்டறைகளில் விவசாயத்திற்கு தேவையான அரிவாள், கத்தி உள்பட பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் சமூக விரோதிகள் சிலர் அரிவாள் போன்றவற்றை வாங்கி தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதால், தமிழகத்தில் உள்ள பட்டறைகளில் சமூக விரோதிகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி மங்களமேடு பகுதியில் உள்ள பட்டறைகளில் மங்களமேடு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பட்டறை உரிமையாளர்களிடம் சமூக விரோதிகளுக்கு அரிவாள் செய்து தர மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கச்செய்தனர். மேலும் இனிவரும் காலங்களில் அரிவாள் செய்து கொடுக்கும் நபர்களின் பெயர், விலாசத்தை குறித்து, போலீஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.