அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது

தம்பதி மீது மோதாமல் இருக்க திருப்பியபோது அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது.

Update: 2021-09-27 21:04 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடையகுறிச்சி கிராமத்திற்கும், விருத்தாசலத்திற்கும் இடையே அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை அந்த பஸ் அப்பகுதியில் உள்ள வளைவில் வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் தம்பதி வந்தனர். இதனைக்கண்ட பஸ் டிரைவர் தம்பதி மீது மோதாமல் இருக்க பஸ்சை சாலை ஓரத்தில் திருப்பியுள்ளார். இதனால் பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி அச்சத்தில் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகளும், தம்பதியும் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்