கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் முதியவர் உயிரிழந்தாரா?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் முதியவர் உயிரிழந்தாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Update: 2021-09-27 20:50 GMT
ஜீயபுரம்
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமணி ராசாத்தி கோவில் தெருவை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் காலை அந்த பகுதியில் நடைபெற்ற முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அன்று மாலையில் அவர் உயிரிழந்தார். அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் உயிரிழந்தார் என்று ஒரு சிலர் கூறினர். அவர், தடுப்பூசி செலுத்தி கொண்டதால் உயிரிழந்தாரா?,  இணை நோய் காரணமாக இறந்தாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்