அரசு பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்

கோபி அருேக அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்தார்கள்.

Update: 2021-09-27 20:05 GMT
கோவையில் இருந்து அந்தியூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள புதுக்கரைப்புதூர் என்ற இடத்தில் சென்றபோது இந்த பஸ்சும், கவுந்தப்பாடியில் இருந்து கோபி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் 2 பஸ்களின் முன்பகுதியும் நொறுங்கி சேதம் அடைந்தது. பஸ்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி கோவை-அந்தியூர் பஸ் டிரைவர் ஆலாம்பாளையத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 44), கவுந்தப்பாடி-கோபி பஸ் டிரைவர் கவுந்தப்பாடியை சேர்ந்த ராஜசேகரன் (54), 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் கோபியை சேர்ந்த கவிதா (43), நசியனூரை சேர்ந்த ரேவதி (33), பிரதீபா உள்பட 10 பேர் லேசான காயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்