கத்தி முனையில் வழிப்பறி; 4 பேர் கைது
வெவ்வேறு சம்பவங்களில் கத்தி முனையில் வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் வேல் முருகன் (வயது 25). இவர் சிவகாசியில் இருந்து நாரணாபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது போஸ்காலனியை சேர்ந்த மாரீஸ்வரன் என்கிற செட்டியார் (23), சபரீஸ்வரன் (22) ஆகியோர் வேல்முருகனை வழிமறித்து கத்தியை காட்டி அவரது சட்டைபையில் இருந்த ரூ.200-யை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து மாரீஸ்வரன், சபரீஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் சிவகாசி முஸ்லிம்ஓடை தெருவை சேர்ந்த சையது சுல்தான் (49) என்பவர் சித்துராஜபுரம் கருமன்கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த சித்துராஜபுரத்தை சேர்ந்த ராக்கையாபாண்டி (30) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்களின் உதவியுடன் அவரை பிடித்து சையதுசுல்தான் சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்து புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ராக்கையாபாண்டியை கைது செய்தனர். சிவகாசி நியூ அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் காமராஜர் நீர்தேக்க தொட்டி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முகமதுஅஷித் (25) என்பவர் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது குறித்து ராஜா சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முகமது அஷித்தை கைது செய்தனர்.