அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-27 19:37 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அருகே உள்ள அக்கறைப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வீடுகளில் சோதனை நடத்தினார். அப்போது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த மணிகண்டன் (வயது 50) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்