புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 406 ஆக உயர்ந்துள்ளது.