தடுப்பூசி முகாமில் அதிகாரி ஆய்வு
வெம்பக்கோட்டையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அதிகாரி ஆய்வு செய்தார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி, சுப்ரமணியபுரம், வெற்றிலையூரணி உள்பட 31 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி நேரில் ஆய்வு செய்தார். அப்போது வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வெள்ளைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
வெம்பக்கோட்டையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அதிகாரி ஆய்வு செய்தார்.