34 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற சப்இன்ஸ்பெக்டர்கள் சந்திப்பு
வேலூர் கோட்டையில் 34 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற சப்இன்ஸ்பெக்டர்கள் சந்திப்பு நடந்தது.
வேலூர்
வேலூர் கோட்டையில் 34 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற சப்இன்ஸ்பெக்டர்கள் சந்திப்பு நடந்தது.
வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 1987ம் ஆண்டு நேரடி தேர்வு மூலம் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு பயிற்சி பெற்றவர்களில் பலர் போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றுள்ளனர். சிலர் தற்போதும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சப்இன்ஸ்பெக்டராக பயிற்சி பெற்று 35-ம் ஆண்டு தொடக்க நாளையொட்டி வேலூர் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீசாரின் சந்திப்பு வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற போலீசார் தங்கள் அனுபவங்கள், பயிற்சியின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் தாங்கள் பயின்ற அறைக்கு சென்று அமர்ந்து, நீங்கா நினைவுகளை நினைவு கூர்ந்தனர். பின்னர் அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.