தினத்தந்தி புகார் பெட்டி

நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-27 18:08 GMT
வேகத்தடையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்படுமா? 

மயி–லா–டு–து–றை–யில் இருந்து செம்–ப–னார்–கோ–வில் வரை உள்ள சாலை–களில் விபத்–து–களை தவிர்க்–கும் வித–மாக பல வேகத்–த–டை–கள் அமைக்–கப்–பட்–டுள்–ளன. அதி–லும் குறிப்–பாக அடிக்–கடி விபத்–து–கள் நடந்து வந்த விள–ந–கர் பகு–தி–யில் புதி–தாக 2 வேகத்–த–டை–கள் அமைக்–கப்–பட்–டது. விபத்–து–களை தவிர்க்க அமைக்–கப்–பட்ட இந்த வேகத்–த–டை–க–ளால் தற்–போது இரவு நேரங்–களில் விபத்–து–கள் ஏற்–பட்டு வரு–கின்–றன. மேலும், வேக–மாக வரும் வாக–னங்–கள் வேகத்–தடை இருப்–பது தெரி–யா–மல் கவிழ்ந்து அரு–கில் உள்ள பய–ணி–கள் நிழ–ல–கத்–தில் மோதி–வி–டு–கின்–றன. எனவே சம்–பந்–தப்–பட்ட அதி–கா–ரி–கள உயிர்–பலி ஏற்–படும் முன்பு வேகத்–த–டை–களில் இரவு நேரங்–களில் ஒளி–ரும் விளக்–கு–கள் அமைக்க நட–வ–டிக்கை எடுக்க வேண–டும்.
                           -சேது–ரா–மன், மணல்–மேடு
வாய்க்கால் தூர்வாரப்படுமா?

திரு–வா–ரூர் மாவட்–டம் நீடா–மங்–க–லம் பகு–தி–யில் உள்ள எட–மே–லை–யூர் கிரா–மத்–தில் மூவா–நல்–லூர் வாய்க்–கால் உள்–ளது. இந்த வாய்க்–கா–லில் இருந்து வரும் நீரை நம்பி 100 ஏக்–கர் விவ–சாய நிலங்–கள் பயன் அடைந்து வந்–தன.தற்–போது இந்த வாய்க்–கால் பரா–ம–ரிப்–பின்றி செடி, கொடி–கள் வளர்ந்து புதர்–மண்டி காட்சி அளிக்–கிறது.இத–னால், அந்த பகு–தி–யில் உள்ள விவ–சாய நிலங்–கள் நீர் இன்றி வறண்டு கிடக்–கும் அவல நிலை உள்–ளது. எனவே, சம்–பந்–தப்–பட்ட அதி–கா–ரி–கள் மூவா–நல்–லூர் வாய்க்–கா–லில் உள்ள செடி, கொடி–களை அகற்றி தூர்–வார வேண்–டும் என்–பதே அந்த பகுதி மக்–க–ளின் எதிர்–பார்ப்–பா–கும்.
-இந்–தி–ராணி, எட–மே–லை–யூர்

பழுதடைந்த மின்மாற்றி சீரமைக்கப்படுமா?
திரு–வா–ரூர் மாவட்–டம் நீடா–மங்–க–லம் பகு–தி–யில் எட–மே–லை–யூர் கிரா–மம் உள்–ளது. இந்த கிரா–மத்–தில் உள்ள தெற்கு தெரு–வில் மின்–மாற்றி ஒன்று அமைக்–கப்–பட்–டி–ருந்–தது. இந்த மின்–மாற்றி பரா–ம–ரிப்–பின்றி தற்–போது பழு–த–டைந்து கிடக்–கிறது.இத–னால் விவ–சாய நிலங்–க–ளுக்கு நீர்ப்–பா–சன வசதி செய்ய முடி–யாத வகை–யில் அடிக்–கடி மின்–தடை ஏற்–ப–டு–கிறது.மேலும், மின்–மாற்–றி–யில் இருந்து அடிக்–கடி தீப்–பொ–றி–யும் வெளி–யே–று–கிறது. இத–னால் பொது–மக்–கள் மின்–மாற்–றியை அச்–சத்–து–டன் கடந்து சென்று வரு–கின்–ற–னர். எனவே, பழு–த–டைந்த மின்–மாற்–றியை சீர–மைத்து மின்–த–டையை தவிர்க்க நட–வ–டிக்கை எடுக்க வேண்–டும் என்–பதே பொது–மக்–க–ளின் கோரிக்–கை–யா–கும்.
-ராஜேந்–தி–ரன், நீடா–மங்–க–லம்.

குண்டும்,குழியுமான சாலை
மன்–னார்–குடி புற–வ–ழிச்–சா–லை–யில் உள்ள மதுக்–கூர் முதல் திரு–மக்–கோட்டை வரை அமைக்–கப்–பட்–டுள்ள சாலை–கள் மிக–வும் மோச–மாக குண்–டும், குழி–யு–மாக உள்–ளது. மேற்–கண்ட சாலை–யில் தின–மும் ஏரா–ள–மான இரு–சக்–கர வாக–னங்–கள், கன–ரக வாக–னங்–கள் சென்று வரு–கின்–றன. குறிப்–பாக பள்ளி, கல்–லூரி வாக–னங்–கள் அதி–க–ள–வில் சென்று வரு–கின்–ற–னர்.இத்–த–கைய போக்–கு–வ–ரத்து முக்–கி–யத்–து–வம் வாய்ந்த சாலை பரா–ம–ரிப்–பின்றி கிடப்–ப–தால் வாகன ஓட்–டி–கள் மற்–றும் பொது–மக்–கள் மிகுந்த சிர–மத்–துக்கு ஆளாகி வரு–கின்–ற–னர்.அது–மட்–டு–மின்றி மழைக்–கா–லங்–களில் சாலை–யில் உள்ள பள்–ளங்–களில் மழை–நீர் தேங்கி விடு–கின்–றன. இது தெரி–யா–மல் வேக–மாக வரும் வாக–னங்–கள் அடிக்–கடி விபத்–தில் சிக்–கி–வி–டு–கின்–றன.எனவே உயிர்–பலி ஏற்–படும் முன்பு மேற்–கண்ட சாலையை சம்–பந்–தப்–பட்ட அதி–கா–ரி–கள் சீர–மைக்க நட–வ–டிக்கை எடுக்க வேண்–டும் என்–பதே பொது–மக்–க–ளின் எதிர்–பார்ப்–பா–கும்.
                       -பொது–மக்–கள், மன்–னார்–குடி.

மேலும் செய்திகள்