காரைக்குடி,
மேலூரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 35). இவர் காரைக்குடி பெரியார் சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் விலை மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வடக்கு போலீசார் அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பேயன்பட்டியை சேர்ந்த அஜித் (21), கழனிவாசலை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். செக்காலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தெற்கு தெருவை சேர்ந்த முத்துமணி (26), அண்ணாநகரை சேர்ந்த முத்து (30) ஆகியோரை வடக்கு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.