ரெயிலில் கடத்திய 42 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
ரெயிலில் கடத்திய 42 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் போலீசார் சோதனை செய்தபோது பயணிகள் இருக்கையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர்.
அந்த பையில் தடை செய்யப்பட்ட 42 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் ஆகிய பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.71 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணை செய்ததில் திருப்பதியை சேர்ந்த ரெட்டியப்பா மகன் ரஜினி குமார் என்பவர் கர்நாடகாவில் இருந்து கடத்திவந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர்.