பெண் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்
பெண் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சேதுபதி. சயனாபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் ஆகாஷ். இவர்கள் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சயனாபுரம் காலனி பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு சேதுபதி, நான் உங்கள் மகளை காதலிக்கிறேன். எனவே உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் இல்லையேல் ஒழித்து விடுவேன் என கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.