வாலிபர் கைது

டிராக்டரை திருடிய வாலிபர் கைது

Update: 2021-09-27 17:34 GMT
நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் வசித்து வரும் அ.தி.மு.க. பிரமுகர் சோலைமுருகன் என்பவரது டிராக்டர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனது. இது சம்பந்தமாக நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை தேடிவந்தனர். இந்தநிைலயில் நயினார் கோவிலை சேர்ந்த  பூமியின் மகன் சேது என்கிற சேதுபதி (வயது31) டிராக்டரை திருடி தென்காசியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை மீட்ட போலீசார் சேதுபதியை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்