சின்னசேலம் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ1 லட்சம் பிடிபட்டது

சின்னசேலம் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ1 லட்சம் பிடிபட்டது

Update: 2021-09-27 17:17 GMT
சின்னசேலம்

சின்னசேலம் ஒன்றியத்தில் தாசில்தார் சத்தியநாராயணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசாரை கொண்ட பறக்கும் படையினர் நேற்று சின்னசேலம் அடுத்த கனியாமூர் கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சேலத்திலிருந்து கச்சிராயப்பாளையம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சேலத்தைச் சேர்ந்த ரேவாட்சிங் (வயது 26) என்பவர் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ.1  லட்சத்து 63 ஆயிரத்து 500 வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த பணத்தை பறிமுதல்செய்த அதிகாரிகள் அதை  சின்னசேலம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமியிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்