த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அசாம் மாநில அரசை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வத்தலக்குண்டு:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை சார்பில் வத்தலக்குண்டு பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அலாவுதின் தலைமை தாங்கினார். த.மு.மு.க. நகர தலைவர் இம்தியாஸ் முன்னிலை வகித்தார்.
அசாமில், விவசாயிகளை அடித்து துன்புறுத்தி துப்பாக்கியால் சுட்டு கொன்ற பாரதீய ஜனதா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக் கண்டன உரையாற்றினார்.
முன்னதாக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது ரிஜால் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் கனவாபீர், மாவட்ட நிர்வாகி ஷேக் பரீத், ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெய்லானி, அன்சாரி தாரிக், அக்கீம் உள்பட பலர் கலந்து கொண்டு அசாம் மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.