திருச்செந்தூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா

திருச்செந்தூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது;

Update: 2021-09-27 11:23 GMT
திருச்செந்தூர்:
`தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 117-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் வேலாயுதம், சி.பா.ஆதித்தனாரின் பெருமைகள் குறித்து விளக்கி பேசினார். ெதாடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜன், செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையா ராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்