திரைப்பட மேடை நடன தொழிலாளர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்-சேலத்தில் நடிகர் சரவணன் பேட்டி

திரைப்பட மேடை நடன தொழிலாளர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று சேலத்தில் நடிகர் சரவணன் கூறினார்.

Update: 2021-09-26 22:03 GMT
சேலம்:
திரைப்பட மேடை நடன தொழிலாளர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று சேலத்தில் நடிகர் சரவணன் கூறினார்.
உறுப்பினர் அடையாள அட்டை
தமிழ் மாநில கிராமிய திரைப்பட மேடை நடன தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு நிறுவனர் ரஜினிசெந்தில் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் சத்தியராஜ் செந்தில், செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, திரைப்பட நடிகர் சரவணன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.
 அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திரைப்பட மேடை நடன கலைஞர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். திரைப்பட மேடை நடன தொழிலை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். 
தனி நல வாரியம்
பின்னர் கூட்டத்தில் திரைப்பட மேடை நடன தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், மற்ற கலைஞர்கள் போல் நடன தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து விட்டு மீண்டும் திரைப்பட மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் அன்பு அக்பர், செயலாளர் பார்த்திபன், பொருளாளர் அஜித்சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்