மழை நீரை அகற்றும் விவசாயிகள்

மழை நீரை அகற்றும் விவசாயிகள்;

Update: 2021-09-26 21:31 GMT
வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி பகுதியில்  பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளமான பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பேரணை முதல் கள்ளந்திரி வரை பெரியாறு பாசன கால்வாய் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடைகின்றன. இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள நெல் வயல்களில் சிலர் கிணற்று நீர்ப்பாசனம் மூலம் முன்பு நடவு செய்ததால் தற்போது நெல் விளையும் நிலையில் உள்ளது. அந்த வயல்களில் மழையினால் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. இதனை கண்ட விவசாயிகள் அதை வெட்டி வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து ஈரபதத்துடன் இருப்பதால் நெல் முளைக்கும் அபாயம் உருவாகி உள்ளது. தற்போது அறுவடை செய்தால் ஈரத்துடன் உள்ள நெல்லை குறைந்த விலைக்கு தான் விற்க முடியும். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டத்திற்குமேல் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்